உலகம்

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை: 4 பேர் பலி

7th Jan 2021 11:27 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்:  அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால் ஏற்பட்ட வனமுறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வாஷிங்டனில் 15 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை அடுத்து ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். 

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது. 

அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, புதன்கிழமை காலை வெள்ளை மாளிகைக்கு வெளியே தனது ஆதரவாளர்களை அணிதிரட்டிய டிரம்ப், ​​அவர்களை நாடாளுமன்ற கட்டடத்துக்கு அணிவகுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே திரண்ட டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர், நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர். டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட முயன்றதால் தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்திய காவல் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி டிரம்ப் ஆதரவாளர்களை கலைக்க முயன்றனர். இதில் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். 

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசியலிலும், மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தில் தனது ஆதரவாளர்கள் காவல்துறையினருடன் சண்டையிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு - தனது ஆதரவாளர்கள் "மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள்" என்றாலும் அவர்கள் "நிம்மதியாக வீட்டிற்குச் செல்ல வேண்டும்" என்று டிரம்ப் அவர்களிடம் கூறினார்.

இந்நிலையில்,  அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால் ஏற்பட்ட வனமுறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வாஷிங்டனில் 15 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிபராக ஜோ பைடன் பதவியேற்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை அத்துமீறி நுழைந்ததை அடுத்து அதிபர் பதிவியில் இருந்து டிரம்ப்பை நீக்குவது குறித்து அந்நாட்டு அமைச்சரவை ஆலோசனை  நடத்தி வருகிறது.

கடைமைகளை நிறைவேற்ற அதிபர் தவறினால் நீக்குவதற்கு அமெரிக்க அரசியல் சட்டத்தின் 25-ஆவது திருத்தம் வழிவகுக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT