உலகம்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜனநாயகம் தாக்கப்பட்டுள்ளது: ஜோ பைடன்

7th Jan 2021 12:30 PM

ADVERTISEMENT

அமெரிக்காவில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என அமெரிக்க அதிபர்(தேர்வு) ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் தாக்குதல் குறித்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், அமெரிக்காவின் அடுத்த அதிபருமான ஜோ பைடன், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் தாக்குதல், ஒரு கிளர்ச்சி என்று குறிப்பிட்டார். வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும் ஜனநாயகத்தைக் காக்கவும் அதிபர் டிரம்ப் தொலைக்காட்சியில் பேட்டியளிக்க வேண்டும் என்று கோரினார். 

மேலும், ஜனநாயகம் உடையக்கூடியது என்பது இன்று ஒருமுறை நினைவூட்டப்பட்டுள்ளது.  ஜனநாயகத்தைப் பாதுகாக்க விருப்பமுள்ள மக்கள், ஜனநாயகத்தை நிலைநிறுத்த தைரியம் கொண்ட தலைவர்கள், எந்த சூழ்நிலையிலும் அதிகாரத்தையும், தனிப்பட்ட நலனையும் சுயலாபத்துக்காக பயன்படுத்தாதவர்கள் தேவை. 

இந்த நேரத்தில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது இது முறையாக தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : US
ADVERTISEMENT
ADVERTISEMENT