உலகம்

ஹெ‌ச் 1பி விசா க‌ட்டு‌ப்​பா​டு​களைத் தள‌ர்‌த்த இ‌ந்​தி​ய-​அ​ù‌ம​ரி‌க்க வணி​க‌க் குழு​ம‌ம் வலி​யு​று‌த்​த‌ல்

7th Jan 2021 04:26 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: ஹெச் 1பி விசா மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த, புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள ஜோ பைடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய-அமெரிக்க வணிகக் குழுமம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் தொழில்களில் பணியாற்ற, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஹெச் 1பி விசா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவலைத் தொடர்ந்து, ஹெச் 1பி விசாவுக்குத் தடை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனால், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றி வந்த இந்தியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. வேலை இழந்த இந்தியர்கள் பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர்.
ஹெச் 1பி விசாவுக்கான தடை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து அண்மையில் உத்தரவிட்டார் அதிபர் டிரம்ப்.
இந்த நிலையில், புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், வருகிற 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஹெச் 1பி விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்த புதிய அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய-அமெரிக்க கொள்கைகள் கூட்டாண்மை பேரவை என்ற வணிகக் குழுமம் வலியுறுத்தியுள்ளது. 
இது தொடர்பாக இந்த அமைப்பின் தலைவர் முகேஷ் அகி, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டி:
ஹெச் 1பி விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எங்கள் அமைப்பின் சார்பில் பரிந்துரை செய்துள்ளோம். அமெரிக்காவில் பணியாற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். அதற்காக தற்போது வழங்கப்படும் ஹெச் 1பி விசா எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தற்போது அமெரிக்காவில் 10 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, ஒவ்வோராண்டும் சந்தையில் தேவை நிலவரத்துக்கேற்ப ஹெச் 1பி விசா எண்ணிக்கையை உயர்த்த  வேண்டும் என்றும், அமெரிக்காவில் தங்கியிருந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
இந்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்கள் சரியானவைதான். இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். 
புதிய வேளாண் சட்டங்கள் அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை என நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT