உலகம்

ரஷியாவில் புதிதாக 23,351 பேருக்குத் தொற்று; 482 பேர் பலி

4th Jan 2021 03:43 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,351 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 482 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 23,351 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 32,60,138 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 3,591 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 482 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 58,988 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

தற்போதுவரை 26,40,036 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,61,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : russia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT