உலகம்

அமெரிக்காவில் 2.09 கோடியைத் தாண்டியது கரோனா தொற்று

3rd Jan 2021 09:14 AM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

அந்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்‍கை 2 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது.  

கரோனா தொற்றுக்கு கலிஃபோர்னியா, டெக்‍சாஸ், ஃப்ளோரிடா போன்ற மாகாணங்களில் மிகவும் அதிகமானோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.  

ADVERTISEMENT

கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஒரு கோடியாக இருந்த தொற்று பாதிப்பு இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

Tags : Coronavirus Cases USA
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT