உலகம்

அமெரிக்காவில் 3,50,000-ஐ தாண்டியது கரோனா பலி

3rd Jan 2021 09:33 PM

ADVERTISEMENT

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 3,50,000-ஐ தாண்டியுள்ளது. 
ஓராண்டு கடந்தும் உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அதிலும் வல்லரசு நாடான அமெரிக்கா, அந்த வைரஸால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. ஒருபுறம் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த போதிலும் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. 
இந்த நிலையில் அமெரிக்காவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 2,99,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,04,30,797 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 2,398 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,50,186ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT