உலகம்

வியத்நாமில் புதிய வகை கரோனாவின் முதல் பாதிப்பு பதிவு

2nd Jan 2021 04:06 PM

ADVERTISEMENT

வியத்நாம் நாட்டில் பிரிட்டனில் இருந்து வந்த பயணிக்கு புதிய வகை கரோனா வைரஸின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டின் டிசம்பர் 24ஆம் தேதியில் பிரிட்டனில் இருந்து வியத்நாம் வந்த பயணி ஒருவருக்கு தற்போது புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய வகை கரோனாவின் முதல் பாதிப்பை வியத்நாம் பதிவு செய்துள்ளது. 

44 வயது பெண்ணான அவருக்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், தொற்று பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.   

ADVERTISEMENT

Tags : Vietnam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT