உலகம்

மேற்கு ஆப்கனில் 45 பேருடன் சென்ற பேருந்தை கடத்திய தலிபான்கள்

2nd Jan 2021 04:35 PM

ADVERTISEMENT

மேற்கு ஆப்கனில் 45 பேருடன் சென்ற பேருந்தை தலிபான்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆப்கன், ஹெராத் மாகாணத்தில் உள்ள  ஹெராத் நகர் - துர்குண்டி நெடுஞ்சாலையில் 45 பேருடன் இன்று காலை 7 மணியளவில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. 
அப்போது அந்த பேருந்தை சில்டோகத்ரான் பகுதியில் இடைமறித்து ஏறிய ஆயதம் ஏந்திய தலிபான்கள் கடத்திச் சென்றனர். பேருந்தை அவர்கள் எங்கு கடத்திச் சென்றனர் என்கிற விவரம் கண்டறியப்பட முடியவில்லை. 
மேலும் இதுதொடர்பாக தலிபான்கள் தரப்பில் எந்ததகவலும் இதுவரை வெளியாகவில்லை. 45 பேருடன் பேருந்து கடத்தப்பட்ட சம்பவம் ஆப்கனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Tags : Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT