உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 6 காவல்துறை அதிகாரிகள் பலி

2nd Jan 2021 06:26 PM

ADVERTISEMENT

ஆப்கனிஸ் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 காவல்துறை அதிகாரிகள் பலியானார்கள்.
ஆப்கனின் நங்கர்ஹர் மாகாணத்தில் பதுங்கியிருந்த தலிபான்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நேற்று திடீர் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் போலீஸ் கமாண்டர் தாரிக் கான் உள்பட 6 காவல்துறை அதிகாரிகள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர். 
இந்த தகவலை தலிபான்களும் உறுதி செய்துள்ளனர். நங்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற மோதலில் 6 காவல்துறை அதிகாரிகள் பலியானதாகவும், 9 பேர் காயமடைந்தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆப்கன் அரசு - தலிபான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT