உலகம்

சிலியில் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு அதிகரிப்பு

2nd Jan 2021 11:07 AM

ADVERTISEMENT


சாண்டியாகோ: சிலியில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துளள்து. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,588 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5-ம் தேதி ஒரு நாள் பாதிப்பு 3,685 பேருக்கு கரோனா பாதித்து சுமார் 5 மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 6,12,564 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து சிலியின் சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வெள்ளிக்கிழமையன்று கரோனாவுக்கு 52 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 16,660 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் சிலியில் புதிய கரோனா பாதிப்பு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 14 நாள்களில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஜனவரி மாதத்தில் கரோனாவின் இரண்டாவது அலை வீசக் கூடும் என்றும் ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரம் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT