உலகம்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் பலி

2nd Jan 2021 08:55 AM

ADVERTISEMENT

 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 462 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,95,411 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்கா அதிகயளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வரிசையில் இந்தியாவும், பிரேசிலும் உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவில் இதுவரை 3,56,445 உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. 1,95,441 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 1,49,205 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,605 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 77,00,578 ஆக உயர்ந்துள்ளது. அதே கால இடைவெளியில் 462 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,95,411 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

தொற்றுநோய் பரவல்களுக்கு மத்தியில் பட்டாசுகள் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடிய போதிலும், புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கடற்கரைகளுக்கு வருவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் போராடினர்.

சாவ் பாலோவில் உள்ள ரிவியரா டி சாவ் லூரென்கோ கடற்கரைக்கு வரும் பயணிகளை தடுப்பதற்காக போலீசார்  மணல் மீது புகை குண்டுகளை வீசி தடுத்தனர்.

Tags : Brazil COVID-19 deaths
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT