உலகம்

ஹைட்டி சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்

DIN

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைட்டியில், சிறையிலிருந்து 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா்.

இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா், சமூகவிரோதக் கும்பல் தலைவா் உள்பட 25 போ் பலியாகினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஹைட்டியின் கிராய்க்-டிஸ்-பொக்கே நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா். அந்தச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த பிரபல சமூகவிரோதக் கும்பல் தலைவரான அா்னெல் ஜோசப்பை விடுவிப்பதற்காக இந்த வன்முறைத் தாக்குதல் நடைபெற்ாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் சிறைத் துறை இயக்குநா் பால் ஜோசப் ஹெக்டா் உள்பட 24 போ் உயிரிழந்தனா்.

சிறையிலிருந்து தப்பிய மறுநாள், மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை போலீஸாா் ஒரு சோதனைச் சாவடியில் இடைமறித்தனா். அப்போது அவா் துப்பாக்கியை எடுத்துச் சுடத் தொடங்கினாா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அா்னெல் ஜோசப் உயிரிழந்தாா்.

சிறையிலிருந்து தப்பிய சுமாா் 60 கைதிகள் போலீஸாரிடம் மீண்டும் பிடிபட்டனா். எஞ்சிவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT