உலகம்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிற்கு 1,386 பேர் பலி!

28th Feb 2021 10:34 AM

ADVERTISEMENT

 

பிரசிலியா: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவிற்கு 1,386 பேர் பலியாகியுள்ளனர்.

இதுதொடர்பாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 61,602 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,17,232ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவிற்கு 1,386 பேர் பலியாகியுள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,54,221 ஆக உள்ளது.

உலக அளவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதேபோல இறப்புகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பாதிப்புகளின் அடிப்படையில் நகரங்களைப் பொறுத்த அளவில் ஸா பாலோ முதல் இடத்திலும், ரயோ டி ஜெனிரோ இரண்டாம் இடத்திலும் உள்ளது.       

பிரேசிலில் இதுவரை 64 லட்சம் பேர் முதல்கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப் பெற்றுள்ளனர்.  அதேநேரம் 18 லட்சம் பேர் இரண்டுகட்ட கரோனா தடுப்பூசிகளும்  செலுத்தப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. .

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT