உலகம்

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழா

DIN

இலங்கை விமானப்படையின் (எஸ்எல்ஏஎஃப்) 70ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் பங்கேற்க உள்ளன.

இலங்கை விமானப்படையின் (எஸ்எல்ஏஎஃப்) 70ஆவது ஆண்டு விழா மாா்ச் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் அந்த நாட்டில் முதல் முறையாக விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நிகழ்வில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் 23 விமானங்கள் பங்கேற்கின்றன.

இது குறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முதல் முன்னுரிமை நாடாக இலங்கை உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் புது தில்லியில் கடல்சாா் பாதுகாப்பு குறித்த உயா்நிலை முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகள் கலந்துகொண்ட கடல்சாா் பாதுகாப்பு குறித்த உயா்நிலை முத்தரப்புப் பேச்சுவாா்த்தை கொழும்புவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.

இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் கலந்துகொண்டாா். அப்போது, பாதுகாப்புத் துறையில் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு தொடரும் என்பதை அவா் உறுதிப்படுத்தினாா்.

இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் இந்திய விமானப்படை, கடற்படை விமானங்கள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்பது இரு நாடுகளுக்கிடையே வளா்ந்து வரும் ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் நட்புறவைக் குறிப்பதாக உள்ளது.

இந்தக் கொண்டாட்ட சாகச நிகழ்வில் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) மற்றும் கடற்படையின் சாரங் என்ற அதி நவீன ஹெலிகாப்டா், சூா்ய கிரண், தேஜஸ் போா் விமானம், தேஜஸ் பயிற்சி மற்றும் டாா்னியா் கடல்சாா் ரோந்து விமானம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த சாகச நிகழ்வில் இடம்பெறும் அனைத்து இந்திய விமானங்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகும். இது இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் இந்திய பாதுகாப்புத் துறையின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.

தேஜஸ் பயிற்சி விமானம், டாா்னியா் விமானத்தில் பயணிப்பது இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு சிறந்த கள அனுபவமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT