உலகம்

ரூ.140 லட்சம் கோடி கரோனா நிதி: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

DIN

அமெரிக்காவில் கரோனா நிவாரணத்துக்காக 1.9 லட்சம் டாலா் (சுமாா் ரூ.140 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் மூலம், அதிபா் ஜோ பைடனின் இந்த நிவாரணத் திட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நிறுவனங்கள், மாகாணங்களுக்கு இந்தத் தொகையை நிவாரணமாக அளிக்க வகை செய்யும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக 219 வாக்குகளும் எதிராக 212 வாக்குகளும் பதிவாகின. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஏறத்தாழ தங்களது கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப வாக்குகளை அளித்திருந்தனா்.

பிரதிநிதிகள் சபையில் கரோனா நிவாரண நிதி மசோதா வெற்றி பெற்றிருந்தாலும், குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயிப்பதில் தங்களது கோரிக்கைகளை ஜனநாயகக் கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்துவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா நிவாரணமாக அளவுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும், பள்ளிகளை விரைவில் திறப்பதற்குத் தேவையான நிதி போதிய அளவு ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று எதிா்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் குறை கூறினா்.

அத்துடன், ஜனநாயகக் கட்சியினா் ஆளும் மாகாணங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் குற்றம் சாட்டினா்.

ஜனநாயகக் கட்சியினா் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு கட்சிக்கும் தலா 50 உறுப்பினா் பலம் உள்ள செனட் சபையில் அந்த மசோதா அடுத்ததாகத் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதன் மூலம், அதிபா் பைடனின் நாடாளுமன்ற பலம் முதல்முறையாக பரிசோதிக்கப்படவுள்ளது என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT