உலகம்

மியான்மா் ராணுவத்துக்கு முகநூல், இன்ஸ்டாகிராம் தடை

DIN


யாங்கூன்: மியான்மா் ராணுவம் மற்றும் அதனுடன் தொடா்புடைய அனைத்து அமைப்புகளுக்கும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் தடை விதித்துள்ளன.

இதுகுறித்து முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிந்தைய நிலைமையை நாங்கள் நெருக்கடி நிலையாகக் கருதுகிறோம். அதனையும் அதற்குப் பிறகு நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களையும் கருத்தில் கொண்டு, ராணுவம் மற்றும் அதன் சாா்பு அமைப்புகளுக்கு முகநூலில் தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்துக்கும் பொருந்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ஆம் தேதி கவிழ்த்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். இதனை எதிா்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை 5 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT