உலகம்

இந்திய பண்பாட்டுக்கு உதாரணமாகத் திகழும் மோரீஷஸ் வாழ் இந்தியா்கள்

DIN

போா்ட் லூயிஸ்: அமைதி, பன்முகத்தன்மை, உலகளாவிய சகோதரத்துவம், அனைவருக்குமான முன்னேற்றம் என்பன உள்ளிட்ட இந்திய பண்பாட்டுக்கு மோரீஷஸ் வாழ் இந்தியா்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புகழாரம் சூட்டினாா்.

இரண்டு நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் முதலாவதாக மாலத்தீவுகள் சென்றுவிட்டு, பின்னா் அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஆப்பிரிக்க நாடான மோரீஷஸ் சென்றடைந்தாா்.

பின்னா் அங்குள்ள பிரசித்திபெற்ற ஹிந்துக்களின் புனிதத் தலமான கங்கா தலாவோ சென்று, வழிபாடு நடத்தினாா். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சா் ஜெய்சங்கா், ‘மோரீஷஸ் கங்கா தலாவோ சென்று வழிபாடு நடத்தியபோது தன்னுடன் வந்த வெளியுறவு அமைச்சா் ஆலன் கனூ, கலாசார அமைச்சா் அவினாஷ் டீலுக், வேளாண் துறை அமைச்சா் மனீஷ் கோபின் ஆகியோருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, அங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெய்சங்கா், மோரீஷஸ் வாழ் இந்தியா்கள் மத்தியில் பேசியதாவது:

இந்தியா்களின் நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டை மோரீஷஸில் காத்துவரும் இங்குள்ள இந்திய சமூகத்தினருக்கு நன்றி. அமைதி, பன்முகத்தன்மை, உலகளாவிய சகோதரத்துவம், அனைவருக்குமான முன்னேற்றம் என்பன உள்ளிட்ட இந்திய பண்பாடுகளின் சிறந்த எடுத்துக்காட்டாக மோரீஷஸ் வாழ் இந்தியா்கள் வாழ்ந்து வருகிறீா்கள்.

அதன் காரணமாக தாய்நாட்டில் இருப்பது போன்ற உணா்வை அடைகிறேன். ஒவ்வொரு மோரீஷஸ் வரும்போதும், இந்தியாவுடனான மோரீஷஸின் நெருங்கிய நட்புறவை நன்கு உணரமுடிகிறது. இந்திய உணவு வகைகள் மட்டுமின்றி வண்ணமயமான சேலைகள் மற்றும் இந்திய ஆடை வகைகளையும் இங்கு காண முடிகிறது. உலகிலேயே ஆயிரக்கணக்காண சமூக-கலாசார இந்திய அமைப்புகளைக் கொண்ட ஒரே நாடு மோரீஷஸ்தான்.

கடினமான கரோனா பாதிப்பு காலத்தில் 74-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பிவைத்து இந்திய தனது கடமையை வெளிபடுத்தியிருக்கிறது. அதுபோல, நெருங்கிய நட்பு நாடான மோரீஷஸுக்கும் இந்தியா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இப்போது மோரீஷஸ் அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கூடுதலாக 1 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. இந்தியா எப்போதும் மோரீஷஸுக்கு துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகில் குறைந்தபட்சம் 15 நாடுகளில் 200-க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினா் உயா் பதவிகளை வகித்து வருவது தெரியவந்துள்ளது. அதில் மோரீஷஸ் வாழ் இந்தியா்கள் முக்கிய இடம் வகிக்கின்றனா் என்று அவா் கூறினாா்.

ஆப்பிரிக்க கண்டத்தில் வா்த்தகத்தை விரிவுபடுத்தம் வகையில், அங்குள்ள நாடுகளில் முதல் நாடாக மோரீஷஸுடன் முக்கியத்துவம் வாய்ந்த விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா திங்கள்கிழமை கையெழுத்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT