உலகம்

அமெரிக்காவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

22nd Feb 2021 03:57 PM

ADVERTISEMENT


வாஷிங்டன்: 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

கரோனா தொற்றுப் பாதிப்பில் உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 2,87,65,423 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இவர்களில் 1,89,73,190 கோடிப் பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 5,11,133 ஆக உள்ளது. 

உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,20,09,909 ஆக இருக்கும் நிலையில், உயிரிழப்பு 24,79,075 ஆக உள்ளது. கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus america
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT