உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 11.19 கோடியாக உயர்வு

22nd Feb 2021 11:26 AM

ADVERTISEMENT

 

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.19 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11,19 கோடி பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 24,78,165 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,73,31,761 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,21,48,602 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 93,917 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ADVERTISEMENT

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,87,65,423 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,11,133 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,10,05,850 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,56,418 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,01,68,174 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,46,560 பேர் பலியாகியுள்ளனர். 

Tags : coronavirus worldwide கரோனா வைரஸ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT