உலகம்

மாலத்தீவுகளுக்கு மேலும் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா

20th Feb 2021 05:29 PM

ADVERTISEMENT

மாலத்தீவுகளுக்கு கூடுதலாக மேலும் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில் சீரம் மையத்தால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் தடுப்பூசிகளை மாலத்தீவுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு வழங்கியது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலத்தீவுகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து 1 லட்சம் கரோனா தடுப்பூசிகளை மாலத்தீவுகளின் நிதியமைச்சர் அப்துல் ஷாஹ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெர்பான்சிம்
ஆகியோரிடம் அவர் வழங்கினார். 

Tags : Jaishankar coronavaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT