உலகம்

பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா: பலி 1,308, பாதிப்பு 51,050

20th Feb 2021 12:25 PM

ADVERTISEMENT

 

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,308 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 2,44,765-ஐ நெருங்கியுள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பிரேசிலில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 51,050 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,081,676 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

பிரேசிலில் அதிகபட்சமாக ஸா பாலோ பகுதியில் இதுவரை 1,96,0564 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 57,256 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.
 

Tags : Brazil coronavirus பிரேசில் கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT