உலகம்

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி

20th Feb 2021 03:17 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சனிக்கிழமை காலை மூன்று வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. 

காபூலின் தாருலமன், கார்ட்-இ-பர்வான், புல்-இ-வாக்தாத் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Afghanisthan Taliban
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT