உலகம்

ஆப்பிரிக்க நாடுகளில் 3.8 மில்லியனை நெருங்கும் கரோனா பாதிப்பு

20th Feb 2021 04:25 PM

ADVERTISEMENT

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3.8 மில்லியனை நெருங்குகிறது. 
ஆசிய, ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா ஆப்பிரிக்க நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இங்கு கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3.8 மில்லியனை நெருங்குகிறது. 
அந்தவகையில், இதுவரை 37,99,029 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்க மையங்கள் தெரிவித்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 1,00,359 பேர் பலியாகியுள்ளனர். 
இவற்றில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவில் 48,708 பேர் பலியாகியுள்ளனர். மேலும் எகிப்தில் 10,201 பேரும், மொராக்கோவில் 8,524 பேரும் அந்த வைரஸால் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 3,349,323 பேர் குணமடைந்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT