தென்னாப்பிரிக்காவில் கரோனாவுக்கு இதுவரை 570 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் தென்னாப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இங்கு நேற்றைய நிலவரப்படி 14,98,766 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 14,03,214 பேர் குணமடைந்தனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கரோனாவுக்கு இதுவரை 570 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் காவல்துறை அமைச்சர் பெக்கி சிலே தெரிவித்துள்ளார்.
கரோனாவால் இதுவரை 27,000 காவலர்கள் பாதிக்ப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 25,000 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.