உலகம்

ஜப்பானின் பியூகுஷிமா பகுதியில் மீண்டும் நில அதிர்வு

14th Feb 2021 05:24 PM

ADVERTISEMENT

 

பியூகுஷிமா: ஜப்பானின் பியூகுஷிமா பகுதியில் ஞாயிறன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது.

ஜப்பானின் பியூகுஷிமா பகுதியில் ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி மாலை 4.13 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ள இந்த நில அதிர்வின் மையமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிமீ ஆழத்தில் இருந்துள்ளது.

ADVERTISEMENT

பியூகுஷிமா மற்றும் மியாகி எல்லைப்பகுதிகளில் இந்த அதிர்வானது நான்கு புள்ளிகள் வரை உணரப்பட்டுள்ளது. ஆனால் இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக சனிக்கிழமையன்று இரவு பியூகுஷிமா பகுதியில் 7.1 அளவுடைய நில அதிர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக 140 பேர் காயமடைந்தனர்.  இந்த அதிர்வானது தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT