உலகம்

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் படுகாயம்

13th Feb 2021 08:36 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் மாகாணத்தில் உள்ள அர்கண்டாப் மாகாணத்தில் சனிக்கிழமை கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 7 காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். 

வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : afghanisthan
ADVERTISEMENT
ADVERTISEMENT