உலகம்

பாகிஸ்தானில் கடும் நிலநடுக்கம்

13th Feb 2021 03:50 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பாகிஸ்தானில் நேற்றிரவு 10.02 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4ஆகப் பதிவான இந்த நிலநடுக்கமானது இஸ்லாமாபாத், பஞ்சாம், பலுசிஸ்தான் உள்ளிட்ட பகுதியில் உணரப்பட்டது. 
இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தஜகிஸ்தானை மையமாகக்கொண்டு பூமிக்கடியில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

Tags : Earthquake
ADVERTISEMENT
ADVERTISEMENT