உலகம்

செவ்வாய் கோளின் சுற்று வட்டப்பாதையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம்

11th Feb 2021 04:12 PM

ADVERTISEMENT

7 மாத பயணத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் செவ்வாய் கோளின் சுற்று வட்டப்பாதையை அடைந்துள்ளது.

"அல் அமல்' அல்லது "ஹோப்' (நம்பிக்கை) எனப் பெயரிடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் ஜப்பானின் தானேகசிமா தீவில் உள்ள ஏவுதளத்திலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது. 

அரபு நாடுகளில் முதல் விண்வெளித் திட்டமான இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி 49.50 கோடி கி.மீ. பயணம் செய்து அதன் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது.

200 மில்லியன் டாலர் (ரூ.1,496 கோடி) மதிப்பீட்டிலான இத்திட்டம் 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 135 பேர் கொண்ட குழுவினர் இத்திட்டப் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ள இந்த விண்கலம் எதிர்வரும் மே மாதம் செவ்வாய் கோளில் இந்த விண்கலம் தரையிறக்கப்படும் என அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Saudi Arabia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT