உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10.78 கோடியாக அதிகரித்துள்ளது
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,78,55,946 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 23,64,978 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,98,71,568 பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,54,70,894 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,01,452 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,97,214 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 200-ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,08,71,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,55,399 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,62,305-ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,34,945 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.