உலகம்

ஜப்பானில் பறவைக் காய்ச்சல்: கொல்லப்படும் 3.5 லட்சம் கோழிகள்

11th Feb 2021 01:48 PM

ADVERTISEMENT

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3.5 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3,56,000 கோழிகள் கொல்லப்படவுள்ளதாக கியூடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிபா மாகாணத்தில் 10-வது முறையாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இங்கு இதுவரை பறவைக் காய்ச்சலால் 4.6 மில்லியன் பறவைகள் இறந்துள்ளன.

ADVERTISEMENT

மேலும் ஜப்பானில், காகவா, ஃபுகுவோகா, ஹையோகோ, மியாஸாகி, ஹிரோஷிமா, நரா, வாகாயமா, டோகுஷிமா ஆகிய பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

ஜப்பானில் பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், .9.3 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜப்பான் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Tags : ஜப்பான் cullled Japan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT