உலகம்

மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா அதிரடி

11th Feb 2021 11:07 AM

ADVERTISEMENT

 

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 

மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது. மேலும் நாட்டில் ஓராண்டிற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. 

ADVERTISEMENT

இந்நிலையில்,  மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 

இதுகுறித்து வியாழக்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும். 

மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் அமெரிக்காவில் ஒரு பில்லியன் டாலர் சொத்துக்களை கையாள்வதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் மீது பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பைடன், சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ள ராணுவத் தலைவர்களுக்கு பயனளிக்கும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை உடனடியாக முடக்க தனது புதிய நிர்வாகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்.

ராணுவம் கைப்பற்றிய அதிகாரத்தை கைவிட்டு மியான்மர் மக்களின் விருப்பத்திற்கு மரியாதை அளிக்க வேண்டும் என அதிபர் ஜோ பைடன் கூறினார். 

Tags : Biden Myanmar military leaders
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT