உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு

11th Feb 2021 10:25 AM

ADVERTISEMENT

 

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவானது.

ஆனால் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை என்று வானிலை மற்றும் புவியியல் அமைப்புகள் விளக்கம் அளித்துள்ளன.

புதன்கிழமை இரவு 7.52 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு எங்கானோ தீவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகவும், கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பொருள் சேதமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : tsunami Indonesia earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT