உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

30th Dec 2021 11:39 AM

ADVERTISEMENT

ஜகாா்த்தா: கிழக்கு இந்தோனேசியாவின் முலுகு மாவட்ட பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆகப் பதிவான் இந்த நிலநடுக்கத்தால் 2 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் சில பாதிப்புகளும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே பகுதியில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதில் அதிகபட்சமாக 5.3 ரிக்டர் அளவுகோல் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

திகுர் கடல்பகுதியிலிருந்து 132 கி.மீ. தொலைவில், 183 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.

இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT