உலகம்

அமெரிக்கா, பிரான்ஸில் கரோனா புதிய உச்சம்

30th Dec 2021 11:48 PM

ADVERTISEMENT

அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டாகும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 2.65 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும்.

அந்த நாட்டின் வாராந்திர கரோனா தொற்றும், கடந்த சில வாரங்களாக இரட்டிப்பாகி வருகிறது.

அதேபோல், பிரான்ஸிலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சமாக 2.08 லட்சத்தைத் தாண்டியது.

ADVERTISEMENT

மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா காரணமாக இந்த புதிய நோய்த்தொற்று அலை எழுந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT