உலகம்

கரோனா பாதிப்பு: உலகளவில் 27.71 கோடியாக அதிகரிப்பு

23rd Dec 2021 10:19 AM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27.71 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 53.7 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி இருப்பது அச்சமடைய வைத்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 277,151,167-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 5,376,725 போ் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | இந்தியாவில் 236 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 24,68,44,781 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,31,30,703 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 89,267 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 51,545,991-ஆகவும் பலி எண்ணிக்கை 8,12,069ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 34,758,481-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 478,325 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 22,222,928-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 618,091 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,713,654- ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,47,173 ஆக உள்ளது. மேலும் 880 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 

Tags : covid
ADVERTISEMENT
ADVERTISEMENT