தென் கொரியாவில் தினசரி கரோனா பலி வியாழக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 109 போ் கரோனாவுக்கு பலியாகினா். இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,015-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, அந்த நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளவா்களின் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 1,083-ஆகிள்ளது.
புதிதாக 6,919 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய் பாதிப்பு எண்ணிக்கை 5,89,978-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.