உலகம்

இந்தோனேசியாவில் பதிவானது ஒமைக்ரான் பாதிப்பு

16th Dec 2021 04:22 PM

ADVERTISEMENT

இந்தோனேசிய நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் உருமாறிய புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையும் படிக்க | மாளிகையில் செய்த இனிப்புகளை வங்கதேச குடியரசு தலைவருக்கு அளித்த ராம்நாத் கோவிந்த்

இந்நிலையில் இந்தோனேசிய நாட்டின் ஜகர்தாவில் மருத்துவமனை தூய்மைப் பணியாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் எதுவும் அவருக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் சுகாதாரத்துறை சிகிச்சைக்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில் மக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சாதிக்கின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க | பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட ஸ்ரீதரன் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

மேலும் தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் 42 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு  கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT