உலகம்

ஆப்கானிஸ்தான்: பண மதிப்பு பெரும் வீழ்ச்சி

16th Dec 2021 12:40 PM

ADVERTISEMENT

ஆப்கன் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆப்கன் பணத்தின்(ஆப்கானி) மதிப்பு பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

ஆப்கன் நாட்டில் 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ஆப்கானியின் மதிப்பு 70-களில் இருந்து மெல்ல உயரத் தொடங்கியது. பின் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியதும் பெரிய பொருளாதார மந்தநிலையை அடைந்தது.

பல நாடுகள் ஆப்கனுக்கு உதவ முன்வராததாலும் கையிருப்பில் இருந்த பணத்தின் மதிப்பு குறைந்ததாலும் அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கூட தலிபான்கள் அதிகரித்தனர். இதனால் பொதுமக்கள் பலர் தங்களின் சொத்துகளை விற்பனை செய்தனர். மேலும், உணவுப் பற்றாக்குறை, வறுமை போன்றவையும் ஆப்கனில் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை(டிச.13) அமெரிக்க டாலருக்கு நிகரான ஆப்கானியின் மதிப்பு 130 வரை அதிகரித்தது. இதனால் , வரலாறு காணாத பெரிய பண மதிப்பு வீழ்ச்சியை ஆப்கன் சந்திருக்கிறது. 

ADVERTISEMENT

இருப்பினும் தற்போது 1 டாலருக்கு 117 ஆப்கானி என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT