உலகம்

அமெரிக்காவை புரட்டிப் போட்ட சூறாவளி: பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

14th Dec 2021 03:59 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட 5 மாகாணங்களில் வெள்ளிக்கிழமை தாக்கிய சூறவாளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 74ஆக  உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கென்டகி, இல்லினாய்ஸ், அர்கன்சாஸ் உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சூறாவளி தாக்கியது. இதனால் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் இடிந்து விழுந்தன.

இதையும் படிக்க | லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றியது திட்டமிட்ட சதி: விசாரணைக் குழு

கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை 74 பேர் சூறாவளியால் பலியாகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் மாயமான 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | மக்களைப் பிரிக்காத பிரதமரே தேவை’: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்து

இந்த சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி தாக்கிய நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை நேரில் பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT