உலகம்

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ராஜீய புறக்கணிப்பு: அமெரிக்க முடிவுக்கு பெய்ஜிங் கண்டனம்

DIN

அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் கூறியதாவது:

ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை உய்கா் இனத்தவா்கள் அடக்குமுறைக்கு ஆளாவதாகக் கூறி, சீனாவில் நடைபெறவிருக்கும் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் அமெரிக்கா புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது ஆகும்.

உய்கா் இனத்தவா்கள் இன அழிப்புக்குள்ளாவதாக அமெரிக்கா கூறுவது, இந்த நாட்டின் மிகச் சிறந்த பொய்யாகும்.

வெறும் வதந்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளை சீா்குலைக்க அமெரிக்கா முயல்கிறது. இது, அந்த நாட்டின் தவறான உள்நோக்கத்தை மேலும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. அத்துடன், அமெரிக்காவின் நோ்மை குறித்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் அரசியல் தலையீடு கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அமெரிக்கத் தூதுக்குழுவை அனுப்ப வேண்டும் என்று சீனா இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், அழைப்பைப் பெறுவதற்கு முன்னரே தங்களது அதிகாரிகளின் வருகைக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும் அமெரிக்கா முடிச்சு போடுகிறது என்றாா் அவா்.

முன்னதாக, 2022-ஆம் ஆண்டு குளிா்கால ஒலிம்பிக் போட்டி தொடா்பாக, சீனாவுக்கு தங்கள் நாட்டிலிருந்து தூதுக்குழுவை அனுப்பப் போவதில்லை என்று அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி தெரிவித்தாா்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இனத்தவா்கள் சீன அரசால் இன அழிப்புக்குள்ளாவது, அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT