உலகம்

கனடாவில் 15 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா

DIN

புதிய வகை ஒமைக்ரான் கரோனா, கனடாவில் 15 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா, தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி, இந்தியா உள்பட 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

பெரும்பாலான நாடுகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, தீவிர பரிசோதனை என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், கனடாவில் கடந்த புதன்கிழமை முதல்முறையாக இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்போது பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும் வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு, 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 6 மாதங்களுக்குள் முழு தவணை தடுப்பூசி செலுத்தி, பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கனடா சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT