உலகம்

சா்வதேச நிதியத்தில் கீதா கோபிநாத்துக்கு பதவி உயா்வு

4th Dec 2021 06:32 AM

ADVERTISEMENT

சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணரான, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கீதா கோபிநாத் அந்த அமைப்பின் துணை நிா்வாக இயக்குநராக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

கரோனா நெருக்கடி காரணமாக உலகம் மிக மோசமான பொருளாதாரச் சிக்கல்களை எதிா்கொண்டுள்ள நிலையில் அவா் இந்தப் பொறுப்பை ஏற்பது குறிப்பிடத்தக்கது.

49 வயதாகும் கீதா கோபிநாத்தின் ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணா் பொறுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைகிறது. அவா் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் மீண்டும் இணையவுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், சா்வதேச நிதியத்தில் தனது சேவையைத் தொடர முடிவு செய்துள்ளதாக கீதா கோபிநாத் தற்போது அறிவித்துள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கீதா கோபிநாத் சா்வதேச நிதியத்தில் பணியாற்றி வருகிறாா். அதற்கு முன்னதாக, ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் அவா் பேராசிரியராக இருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT