உலகம்

ஸ்லோவாகியா: கரோனா பாதிப்பு புதிய உச்சம்

4th Dec 2021 04:03 AM

ADVERTISEMENT

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 15,278 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், 7,12,749 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 90 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 14,696-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT