உலகம்

உலக கரோனா பாதிப்பு 26.44 கோடியாக உயர்வு

3rd Dec 2021 10:44 AM

ADVERTISEMENT

 

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26.44 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சா்வதேச அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 264,473,438 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 52 லட்சத்து 50 ஆயிரத்து 054 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 23,84,91,434 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,07,31,950 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 86,999 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 49,716,825     பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 806,398 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 39,389,646 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 9,520,781 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையும் படிக்க | கிளா்ச்சியாளா் பகுதிகளை உக்ரைன் ராணுவம் தாக்கும்: ரஷியா கவலை

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 34,615,757 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 470,115 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 34,045,666 பேர் குணமடைந்துள்ளனர்.    

உலக அளவில் 3-ஆவதாக பிரேஸிலில் 22,118,782 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலிகளைப் பொறுத்தவரை இதுவரை 615,225    போ் அந்த நோய்க்கு பலியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | கரோனாவிலிருந்து மீண்டவா்களை ஒமைக்ரான் மீண்டும் தாக்கும்

ADVERTISEMENT
ADVERTISEMENT