உலகம்

இலங்கை: முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி

3rd Dec 2021 04:01 PM

ADVERTISEMENT

இலங்கையில் இன்று முதல் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இன்று வெள்ளிக்கிழமை ஆப்பிரிக்காவிலிருந்து இலங்கை வந்த பயணிக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை முடிவில் அவருக்கு புதிய வகை கரோனா(ஒமைக்ரான்) இருப்பது கண்டறியப்பட்டது. பின் உடனடியாக தொற்றால் பாதித்தவரையும் ,அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை அரசு கடந்த நவ.28-ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா , நமீபியா , லெஸ்தோ , ஜிம்பாவே போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போது அந்நாட்டில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் உருவாகியிருக்கிறது.

படிப்படியாக கரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கடந்த அக்.1ஆம் தேதி முதல் இலங்கையில் ஊரடங்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒமைக்ரான் அச்சுறுத்துதலை தொடங்கியிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT