உலகம்

தென்னாப்ரிக்காவிலிருந்து மலேசியா வந்த மாணவிக்கு ஒமைக்ரான் பாதிப்பு

3rd Dec 2021 12:38 PM

ADVERTISEMENT


ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில், வெள்ளிக்கிழமை முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்ரிக்காவிலிருக்கும் தனது குடும்பத்தினரை சென்று பார்த்துவிட்டு கடந்த மாதம் மலேசியா திரும்பிய வெளிநாட்டு மாணவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் கெய்ரி ஜமாலுதீன், கூறுகையில், 19 வயது மாணவி சிங்கப்பூரில் படித்து வருகிறார். இவர் நவம்பர் 19ஆம் தேதி மலேசியாவுக்கு வந்துள்ளார். அவர் வரும்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருடன் தங்கியிருந்தவர்கள் மற்றும் அவரது வாகன ஓட்டிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா உறுதியாகவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான், தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. உடனடியாக, நவம்பர் 11 முதல் 28ஆம் தேதி வரை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி கரோனா உறுதியான 74 பேரின் மாதிரிகளும் மரபணு வரிசைமுறை பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில், மாணவிக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT