உலகம்

ஐ.எம்.எஃபின் துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமனம்

3rd Dec 2021 12:53 PM

ADVERTISEMENT

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநராக இந்தியரான கீதா கோபிநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் கடந்த 2018 ஆண்டு ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளியல் வல்லுநராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: மனித வள மேலாண்மைத்துறை அறிவிப்பு

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான இவர் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் அப்பணியில் சேர இருப்பதாகவும் ஐ.எம்.எஃபில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குநராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளதால் அப்பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது முதல்முறையாக சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநராக உள்ள கிறிஸ்டலினா ஜார்ஜிவா மற்றும் துணை இயக்குநராகும் கீதா கோபிநாத் இருவரும் அடுத்தடுத்த உயர்பதவிகளில்  இருக்கும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT