உலகம்

பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் பரவலை தடுத்துவிட முடியாது: உலக சுகாதார அமைப்பு 

1st Dec 2021 09:43 AM

ADVERTISEMENT

பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது. அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் புதிய வைரஸ் தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்கு ஒமைக்ரான் என உலக சுகாதார மையம் பெயரிட்டது. இந்த உருமாறிய புதிய கரோனா தொற்று பரவலை தடுக்க, உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

 

ADVERTISEMENT

ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என இந்தியா சர்வதேச வருகைக்கான வழிகாட்டுதல்களை திருத்தி நள்ளிரவு முதல் அமல்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க | தில்லி பாஜக விளம்பரத்தில் எழுத்தாளா் பெருமாள் முருகனின் புகைப்படம்: கட்சி வருத்தம் தெரிவிப்பு

இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் வருவோருக்கு பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததுள்ளது. 

மேலும் பயணத் தடைகள் மூலம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தும். 

"60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது கடுமையான கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று பாதிப்பில் உள்ளவர்கள், அல்லது இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்) உள்பட்டவர்கள், பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட வேண்டும்."

இதையும் படிக்க | மேட்டூர் அணையிலிருந்து 11,000 கன அடி நீர் வெளியேற்றம்

எதிர்காலத்தில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட சர்வதேச உடன்படிக்கை அவசியம். ஆபத்துக்களை நீக்கும் வகையில் உலக நாடுகள் அத்தியவாதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என ஒமைக்ரான் பயண ஆலோசனை அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததுள்ளது. 

Tags : omicron ஒமைக்ரான் Blanket travel bans Omicron spread பயணத் தடைகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT