உலகம்

ஆங் சான் சூகி மீதான வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

1st Dec 2021 02:38 AM

ADVERTISEMENT

 

பாங்காக்: மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீா்ப்பு செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது, வன்முறையைத் தூண்டியது ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்ற வந்த வழக்கின் தீா்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவதாக இருந்தது.

எனினும், வழக்கில் புதிய சாட்சியத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் தீா்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனா்.

ADVERTISEMENT

ஆங் சான் சூகி மீது ஊழல் உள்ளிட்ட கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 75 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த இரு தலைவா்களுக்கு நீதிமன்றம் 90 மற்றும் 75 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நினைவுகூரத்தக்கது.

ஊழல் வழக்கில் கயின் மாகாண முன்னாள் திட்டமிடல் துறை அமைச்சா் தான் நயிங்குக்கு 90 ஆண்டுகளும் மாகாணத்தின் முன்னாள் பெண் முதல்வா் நான் கீன்ட்வே மியின்டுக்கு 75 ஆண்டுகளும் விதித்து மாகாண நீதிமன்றம் இந்த மாதம் உத்தரவிட்டது.

அதற்கு முன்னதாக, தேசத் துரோக குற்றச்சாட்டில் ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான வின் டேயினுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT