உலகம்

இலங்கை : செப்டம்பர் -6 வரை ஊரடங்கு நீட்டிப்பு

27th Aug 2021 04:02 PM

ADVERTISEMENT

இலங்கையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க ஆகஸ்ட் -30 வரை  பொது முடக்கத்தை அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாலும் , இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் வரும் செப்டம்பர் - 6 ஆம்  தேதி வரை நாடுமுழுவதும் பொது முடக்கம் தொடரும் என அந்நாட்டு அதிபா்  கோத்தபய ராஜபட்ச அறிவித்திருகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,597 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் 209 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,12,370 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,157 ஆகவும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT